நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் இந்திய விஜயம் பிற்போடப்படலாம் என தெரியவருகின்றது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது. கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளும் அமுலில் உள்ளது.
இது உட்பட மேலும் சில விடயங்களால் நிதி அமைச்சரின் இந்திய விஜயம் பிற்போகலாம் என தெரியவருகின்றது.
அத்துடன், தற்போதைய சூழ்நிலையில் இந்தியா செல்ல முடியாது என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று தெரிவித்தார்.
ஜனவரி 10 ஆம் திகதி நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இந்தியா செல்வாரென முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
#SriLankaNews