கொவிட் 19 தொற்று காரணமாக இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்மையால் டொலர் கையிருப்பு பற்றாக்குறை காரணமாக அத்தியாவசிய பொருட்கள் கொள்கலன்களை உரிய காலத்தில் விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, நாட்டின் நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்கு ஆலோசனைகளையும் உதவிகளையும் கோரி சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) கடிதம் எழுதியுள்ளதாக புதன்கிழமை தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நிதியுதவி கோரி இலங்கை அரசாங்கத்திடமிருந்து எழுத்து மூலமான கோரிக்கை இதுவரை தமக்கு வரவில்லை.
அவ்வாறு எழுத்து மூலமான கோரிக்கை கிடைத்தால் சாத்தியமான மாற்று வழிகள் குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி மசாஹிரோ நோசாகி தெரிவித்துள்ளார்.
#srilankaNews
Leave a comment