3 1 scaled
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவிலிருந்து இலங்கை திரும்பியவுடன் பசில் அறிவிப்பு

Share

அமெரிக்காவிலிருந்து இலங்கை திரும்பியவுடன் பசில் அறிவிப்பு

மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரும் எண்ணம் தமக்கு இல்லை என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பல மாதங்களாக அமெரிக்காவில் தங்கியிருந்த பசில் ராஜபக்ச இன்று (05.03.2024) காலை 8.16 மணியளவில் Emirates Airline விமானமான EK 650 இல் இலங்கை வந்தடைந்தார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க ஆகியோர் விமான நிலையத்திற்குச் சென்று பசில் ராஜபக்சவை வரவேற்றனர்.

இந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பசில் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எமது கட்சி ஒருபோதும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கவில்லை. அத்துடன் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை.

எனினும் எந்த தேர்தல் நடந்தாலும் அதற்கான ஏற்பாடுகளை நான் செய்வேன். தேவையான இடங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என நம்புகிறேன். ஒவ்வொரு தேர்தலும் சவாலாகவே உள்ளது.

நாங்கள் மக்களை ஒருபோதும் ஏமாற்றுவதில்லை. மக்கள் சொல்வதைச் செய்கிறோம் என குறிப்பினட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 189
செய்திகள்உலகம்

டிரம்பின் ஈரானியப் போரை நிறுத்தும் முயற்சி தோல்வி: செனட் சபையில் ஜனநாயகக் கட்சியின் தீர்மானம் நிராகரிப்பு!

அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்துவதற்கும், அமெரிக்கப் படைகளைத் திரும்பப்...

world 188
செய்திகள்உலகம்

துருக்கியில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: 8 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி – நாடு முழுவதும் அதிர்ச்சி!

தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (ஏப்ரல் 16) இடம்பெற்ற பயங்கரத் துப்பாக்கிச் சூட்டுச்...

world 187
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு திரும்புவோருக்கு விசேட வசதி: இனி இணையவழியில் பேருந்து ஆசன முன்பதிவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, காலி மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களிலிருந்து மீண்டும்...

world 191
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 16) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...