tamilni 566 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

பொதுஜன பெரமுன கட்சி அமைதியாக வெல்லும்

Share

பொதுஜன பெரமுன கட்சி அமைதியாக வெல்லும்

பொதுஜன பெரமுன கட்சி ஆமை போன்றது, அமைதியாக வெற்றிகளைப் பெறும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிச்சயமாக வெற்றி பெறும். தற்போதைய நிலையில் பொதுஜன பெரமுன கட்சி அமைதியாக இருக்கின்றது.

ஆனால் எதிர்வரும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக எங்கள் கட்சியை நாங்கள் அமைதியாக பலப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அதனை அறியாத பல்வேறு கட்சிகள் எதிர்வரும் தேர்தல்களில் தாங்களே வெற்றி பெறுவோம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் உண்மை என்னவென்றால் தற்போதைய நிலைமை ஆமைக்கும் முயலுக்கும் இடையிலான ஓட்டப் பந்தயத்தைப் போன்றது. பந்தயத்தின் தொடக்கத்தில் முயல் முன்னிலையில் இருந்த போதிலும் இறுதியில் ஆமை வென்றது போன்று மொட்டு கட்சியும் இறுதியில் வெற்றி பெறும். நாட்டுப்புறக் கதையில் பந்தயத்தின் நடுவில் முயல் உறங்கியதே அது தோற்கடிக்கப்பட்டதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றது.

ஆனால் உண்மையில் போட்டியில் வெற்றி பெறுவதற்கு ஆமைக்கே உரித்தான உத்திகள் இருந்தமையால் ஆமை வென்றது என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...