ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நாளை (09) இராஜினாமா செய்யவுள்ளாரென சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரட்டை குடியுரிமை உடையவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே சட்டம் நிறைவேறுவதற்கு முன்னரே பஸில் பதவி விலகுகின்றார்.
அந்த இடத்துக்கு பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளார் எனவும், அவருக்கு முக்கிய அமைச்சு பதவியொன்று வழங்கப்படலாம் எனவும் தெரியவருகின்றது.
#SriLankaNews
Leave a comment