பஸில் ராஜபக்சவினால் பாராளுமன்றத்தில் இனி எதனையும் செய்ய முடியாது என்பது 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான வாக்கெடுப்பின் மூலம் தெளிவாகி உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
மேலும், பஸில் ராஜபக்சவின் கருத்துக்கு எதிராகச் சென்று எம்.பி.க்கள் 22ம் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். தற்போது பஸிலுக்கு பாராளுமன்றத்தில் அதிகாரம் இல்லை.
இதேவேளை, நாட்டில் இன்று மக்கள் வாழ முடியாத மிக மோசமான நிலைமை உருவாகியுள்ளது. பிள்ளைகளுக்கு உணவு வழங்குவதற்காக அனைத்தையும் அடகு வைத்துவிட்டு இனி அடகுவைக்க ஒன்றும் இல்லாமல் மக்கள் தவிகின்றனர்.
பாடசாலை மாணவர்களில் சுமார் முப்பது வீதமானவர்கள் உணவின்றி பாடசாலைக்கு வருவது தெரியவந்துள்ளது – எனவும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment