ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, இன்று (09) முற்பகல் அமெரிக்கா நோக்கி பயணமானார்.
ஜுலை 09 ஆம் திகதி இலங்கையில் மக்கள் எழுச்சி ஏற்பட்ட பின்னர், நாட்டைவிட்டு செல்ல பஸில் ராஜபக்ச முயற்சித்தார். எனினும், அந்த முயற்சி கைகூடவில்லை.
இந்நிலையிலேயே அவர் இன்று அமெரிக்கா சென்றுள்ளார்.
மொட்டு கட்சியின் மாநாடு நவம்பரில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னர் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
#SriLankaNews