ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும், முன்னாள் நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளாரென சமூக வலைத்தளங்களை மேற்கோள்காட்டி சிங்கள இணைய ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான பஸில் ராஜபக்ச கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் நேற்று சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று முற்பகல் தனியார் விமானமொன்றில், இரத்மலானை விமான நிலையத்திலிருந்து டுபாய் நோக்கி அவர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மேற்படி தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என பஸில் ராஜபக்சவுக்கு நெருக்கமான ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
#SriLankaNews