இலங்கைசெய்திகள்

மதுபானசாலைகள் திறப்பு! – வைத்திய நிபுணர்கள் கடும் அதிருப்தி

Share
Photo 1 44444 1
Share

நாட்டில் கொரோனா பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது பல தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க எதிர்வரும் முதலாம் திகதி வரை அரசால் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  நேற்று முதல் மதுபானசாலைகளைத் திறக்க மதுவரித் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

மதுபானசாலைகள்  திறக்கப்பட்ட நேரம் முதல் மதுபானசாலைகள் வாயில்களில் மக்கள் கூட்டம் பெருந்திரளாக அலைமோதுகிறது.

இந்த நிலையில், மதுபானசாலைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் வைத்திய நிபுணர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசின் இந்த செயற்பாடானது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்துக்கு மிகப் பெரும் இடையூறாகும்.

மதுபானசாலைகளில் மக்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. இதனால் தற்போது நாட்டில் மதுபான கொத்தணி உருவாகக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது – என வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா எஸ் குணரத்ன தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...