23 653c90b6836c6
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கை தம்பதி தொடர்பில் தகவல்

Share

வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கை தம்பதி தொடர்பில் தகவல்

மலேசியாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இலங்கை தம்பதியின் சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில், இன்று அதிகாலை 2.20 மணியளவில் சடலங்கள் கொண்டு வரப்பட்டன.

யு.எல். 319 என்ற விமானம் மூலம் இந்த இரு சடலங்களும் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக விமான நிலைய தரவுகள் தெரிவித்துள்ளன.

மலேசியாவில் கடந்த 21ஆம் தேதி நிகழ்ந்த கார் விபத்தில் பொறியாளர்கள் இருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தனர்.

மலேசியாவில் மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றிய தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள இவர்களது வீட்டிற்கு அருகில் அவர்கள் ஓட்டிச் சென்ற கார் மற்றுமொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

விபத்தின் போது அவர்களின் மகளும் காரில் இருந்த நிலையில் மகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த பெண்ணுக்கு 33 வயது எனவும் அவரது கணவருக்கு 35 வயது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...