tamilni 334 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தரங்கிற்கு தடை..!

Share

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தரங்கிற்கு தடை..!

நாடு கடந்த தமிழீழ அரசினால் ஒழுங்கு செய்யப்பட்ட ”இலங்கை மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகளின் துயரம்” என தலைப்பிடப்பட்ட கருத்தரங்கிற்கு தி.மு.க தலைமையிலான தமிழ்நாட்டு அரசு அனுமதி மறுத்திருப்பதை தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை வன்மையாக கண்டனம் வெளியிட்டுள்ளது.

ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுத மௌனிப்புக்கு பின்னர் ஈழத் தமிழர்களது இன விடுதலைப் போராட்டத்தை அரசியல் ரீதியாக சர்வதேச அரங்கில் முன் நகர்த்திக் கொண்டிருக்கும் ஒரு வலுவான அமைப்பாக இன்றுவரை நாடு கடந்த தமிழக அரசாங்கமே செயற்படுகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் எவ்விதமான செயற்பாடுகளையும் ஈழத்தில் செய்ய விடாது இலங்கை அரசாங்கம் பாரிய தடைகளை விதித்திருக்கின்றது. இந்த அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்ளும் நாட்டிற்குள் வர முடியாதபடி தடை உத்தரவு போட்டிருக்கின்றது.

இதற்கான பிரதான காரணம் இலங்கை அரசுக்கு அரசியல் ரீதியாக பல வழிகளிலும் சர்வதேச அரங்கில் பாரிய அழுத்தங்களை இன்று வரை பிரயோகிக்கின்ற ஓர் பலமான அமைப்பாக நாடு கடந்த தமிழீழ அரசு செயற்படுகின்றமையே காரணமாகும்.

இவ்வாறான சூழ்நிலையில் இன்று இருக்கக்கூடிய தி.மு.க தலைமையிலான தமிழக அரசு ஈழத் தமிழர்கள் விவகாரங்களில் அன்று தொடக்கம் இன்று வரை எதிராகவே தமிழர் விரோதப் போக்கில் செயல்பட்டு வருகின்றது.

இதற்கு சான்றாக 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்ட யுத்தம் ஓர் உதாரணமாகும் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகள் தமிழகத்தில் தொடரும் தொடர வேண்டும் இதற்கு எதிராக தமிழகத்தில் எந்த கட்சிகள் தடை போட்டாலும் அத் தடைகளை அவர்கள் திருப்பி பெற்றுக் கொள்ள வேண்டும்.

இல்லையேல் தடைகள் அனைத்தும் தமிழக தொப்புள் கொடி உறவுகளால் அனைத்து வழிகளாலும் எதிர்க்கப்படும் என்பதை தமிழ்நாடு அரசுக்கு மிக தெளிவாக வலியுறுத்துவதோடு மேலும் தி.மு.க தலைமையிலான தமிழ்நாட்டு அரசின் தமிழர் விரோதச் செயல்களையும் தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை வன்மையாக கண்டிக்கின்றது என தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...