இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக தடை விதிக்க ஆதரவு வழங்குமாறு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ் அந்நாட்டு அரசிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
‘இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை தடை செய்யுங்கள்’ என்ற வாசனத்துடனான பதாகையுடன் அவர் தனது உத்தியோகபூர்வ டுவிற்றர் பக்கத்தில் வெளியிட்ட காணொலியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் இலங்கையில் இடம்பெற்ற போரின் வடுக்கள் இன்னமும் நீங்கவில்லை.
அதுமட்டுமன்றி உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் உறுதி செய்யப்பட வேண்டும்.
மனித உரிமைகள் உறுதி செய்வதற்கான தலைமைத்துவத்தை பிரிட்டன் அரசு வழங்க வேண்டும். நாம் நீதிக்காக போராட வேண்டும். பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும்.
உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கான நாம் அதனை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என சாரா ஜோன்ஸ் அந்தக் காணொலியில் மேலும் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews