திலீபன் நினைவேந்தலுக்கு தடையுத்தரவு!
தியாக தீபம் திலீபனின் 34 ஆவது ஆண்டு நிறைவேந்தலை நினைவுகூர மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றால் தடை யுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபை மேஜர், தமிழரசு கட்சி இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணபிள்ளை சேயோன், பேரின்பராசா ஜனகன், சுவீகரன் நிசாந்தன் ஆகியோருக்கு எதிராகவே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது கொரோனாத் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த சுகாதார நடவடிக்கைகளை நாட்டு மக்கள் கடைப்பிடித்தல் அவசியம்.
இவ்வாறான சூழலில் நினைவுகூரல் நடவடிக்கை தேவையற்ற ஒன்று என காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியால் தடை உத்தரவு கோரிக்கை மன்றுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் பொலிஸாரால் மன்றுக்கு கோப்பிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் பொலிஸார் குறித்த இடத்தில் 15 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரையில் மேற்கொள்ள தீர்மானித்திருக்கும் மேற்படி நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் பொருட்டு பொலிஸார் கோரியவாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்ற தடை உத்தரவை உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.