plastic
இலங்கைசெய்திகள்

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!!

Share

பிளாஸ்டிக் பயன்பாடு சர்வதேசத்திலும் இலங்கையிலும் பாரிய பிரச்சினையாக காணப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு சுற்றாடல் அமைச்சு ஐந்து ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில பிளாஸ்டிக் உற்பத்திகளையும் தடை செய்யவிருப்பதாக சுற்றாடல் அமைச்சு செயலாளர் அனில் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, சுற்றாடலுக்குப் பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதக விளைவுகளைக் குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றாடலில் கடுமையான தாக்கத்தை உருவாக்குகின்றன.

எனவே எதிர்வரும் ஜூன் மாதம் முதல் பிளாஸ்டிக் கோப்பைகள், கரண்டிகள், பீங்கான்கள், மாலைகள், முட்கரண்டிகள், இடியப்பத் தட்டுகள் போன்றவை தடை செய்யப்படவுள்ளன.

அத்துடன் நாட்டில்  தேவைக்கதிகமான கையிருப்பு உள்ளதால் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் சிறு பிளாஸ்டிக் உருண்டைகளின் (Plastic Pellets) இறக்குமதியையும் கட்டுப்படுத்தவுள்ளதாகவும் இதன்மூலம் டொலரை சேமிக்க முடியும் என்றும் தெரிவித்தார்

மேற்குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்வதால் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை கொண்டு  தொழில் ஆரம்பிக்க இருப்போருக்கு இது உந்து சக்தியாக இருக்கும். மக்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக் பீங்கான், கரண்டிகள் போன்றவற்றை வீடுகளில் உபயோகிப்பதில்லை. இருந்தாலும் அவர்கள் வெளிப்புறங்களில் உதாரணமாக சுற்றுப் பயணங்கள்  மேற்கொள்ளும் போது குறித்த வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதோடு அவற்றை சூழலில் வீசுவது போன்ற செயற்பாடுபளை செய்வதன் மூலம் சுற்றுப்புறத்திற்குப் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றனர்.

சந்தைக் கேள்விக்கேற்ப பிற பிளாஸ்டிக் பொருட்களையும் இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பிளாஸ்டிக் அற்ற மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற சுற்றாடலை உருவாக்க முயற்சிக்கிறோம் என அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...