யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாவீரர் நாள் நிகழ்வுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் கோப்பாய் பொலிஸாரால் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த விண்ணப்பத்துக்கு, கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ள நிலையில், அவர்களுக்கான நீதிமன்ற தடையுத்தரவு இன்று அவர்களிடம் வழங்கப்பட்டது.
இதன்படி. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நீதிமன்ற தடையுத்தரவில், தமிழீழ விடுதலைப் புலிகளின் இறந்த நபர்களை நினைவு கூறுகின்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை, தற்போது நாட்டில் காணப்படும் கொரோனாத் தொற்றுப் பரவலை கவனத்தில் கொண்டு, நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பொது இடத்தில், பொதுமக்களை ஒன்றுகூட்டியோ அல்லது தனிநபர் மூலமோ நடாத்துவதற்கு 15ம் இலக்க குற்றவியல் சட்டத்தின் பிரகாரம்
தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது – என்றுள்ளது.
இதேவேளை, யாழ். பல்கலைக்கழக சூழலில் மாவீரர் நாள் நிகழ்வு அனுஷ்டிக்கப்படலாம் என்ற சந்தேகத்தின் பேரில், பல்கலைக்கழக சூழலில் இராணுவத்தினரும் பொலிஸாரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews