கொரோனா கட்டுப்பாடுகள் பகுதி பகுதியாக தளர்த்தப்பட்டுவரும் நிலையில், பொது நிகழ்வுகள் மற்றும் வைபவங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவிக்கையில்,
நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவரும் நிலையில், தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. திருமண விழாக்கள், கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் அதிக மக்கள் கூடுவதாலேயே தொற்று மீண்டும் அதிகரிக்கிறது.
மக்கள் பொறுப்பின்றி நடந்துகொள்வார்களாயின், மீண்டும் நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் அமுல்படுத்த வேண்டியநிலை ஏற்படலாம். எனவே மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும், என எச்சரித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment