பம்பலப்பிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் அண்மையில் ஏழு மாடி கட்டடத்திலிருந்து மர்மமான முறையில் விழுந்து உயிரிழந்த 15 வயது சிறுவனின் உடலில் ஐஸ் போதைப்பொருள் கலந்திருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுவனின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே சிறுவனின் உடலில் மெத் ஆம்பெடமைன் அல்லது ஐஸ் போதைப்பொருள் கலந்திருந்ததாக தெரியவந்துள்ளது.
நீதிமன்ற இலக்கம் 3 நீதவான் சிலானி பெரேராவின் உத்தரவின் பேரில் விசேட நீதித்துறை வைத்திய அதிகாரி ராகுல் ஹக் பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.
மார்புப் பகுதியில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் ராஜா அபிலாஷ் என்ற சர்வதேச பாடசாலை மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் குடும்பத்தில் ஒரே குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment