law
இலங்கைசெய்திகள்

பேராதெனிய மாணவர்களுக்கு பிணை!

Share

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் 14 பேரையும் பிணையில் விடுதலை செய்ய கண்டி பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலா 15 ஆயிரம் ரொக்கப்  பிணையிலும், 5 இலட்ச ரூபாய் சரீரப் பிணையிலும் இவர்களை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சமோத் சத்சர ஒவ்வொரு மாதமும் கொழும்பில் உள்ள குற்றத்தடுப்புப் பிரிவில் முன்னிலையாக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள ஏனைய மாணவர்களுக்கும் நீதிமன்றம் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளதோடு, அவற்றை மீறினால் பிணை இரத்து செய்யப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...