tamilnid 28 scaled
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகள் தலைவரின் படம் பொறித்த ஆடை அணிந்த இளைஞனுக்குப் பிணை

Share

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடைய படம் மற்றும் சின்னம் பொறித்த ஆடை அணிந்து மாவீரர் தினத்தில் பங்கெடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொடிகாமத்தில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில், கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி இராணுவத்தினரால் அந்த இளைஞன் கைது செய்யப்பட்டு கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இதற்கமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேற்படி இளைஞருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த கொடிகாமம் பொலிஸார், அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து, அந்த இளைஞனை பிணையில் விடுவிக்குமாறு இன்று (27.12.2023) சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் சார்பாக முன்னிலையாகிய சட்டத்தரணி தர்மகுலசிங்கம் அஞ்சனன், இளைஞரை விடுவிப்பதற்கு, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பத்தை மன்றில் செய்துள்ளார்.

இதனையடுத்து, இன்று நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேற்படி இளைஞனை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...