‘கோ ஹொம் கோடா’ போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த பொலிஸ் அதிகாரிக்குப் பிணை!

colombo 1

கொழும்பு – காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு கோட்டாபய அரசுக்கு எதிராக மக்கள் நடத்தும் எழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்று கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

விடுமுறை நாளான இன்று அவருக்குச் சார்பாகச் சட்டத்தரணிகள் பலர் இலவசமாக ஆஜராகினார்கள்.

இதன்போது குறித்த பொலிஸ் அதிகாரிக்குப் பிணை வழங்கிய நீதிமன்றம், வழக்கை எதிர்வரும் 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிட்டது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version