சீரற்ற காலநிலையால் நால்வர் பரிதாப மரணம்

tamilni 370

சீரற்ற காலநிலையால் நால்வர் பரிதாப மரணம்

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் கடந்த இரு நாள்களில் 198 குடும்பங்களைச் சேர்ந்த 662 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தால் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்றும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளையில் இரு யுவதிகளும், பேராதனையில் நபர் ஒருவரும் மண்சரிவால் உயிரிழந்துள்ளனர்.

களுத்துறையில் சிறுவன் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சீரற்ற காலநிலையால் ஒரு வீடு முழுமையாகவும், 37 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version