அஸூர் எயார்லைன்ஸ் சேவையை ஆரம்பித்தது

image 8d1b7af8d0

ரஷ்யாவின் அஸூர் எயார்லைன்ஸ் நிறுவனம் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

அதற்கமைய, ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து புறப்பட்ட அஸூர் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ZF1611 என்ற விமானம், 335 பயணிகளுடன் இன்று (03) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

மொஸ்கோவில் இருந்து வாரத்தில் இரண்டு நாட்கள் அஸூர் விமான சேவைக்கு சொந்தமான விமானம் இலங்கைக்கான சேவைகளை முன்னெடுக்கும் என ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version