tamilni 299 scaled
இலங்கைசெய்திகள்

சர்வதேச விசாரணைக்கு தயார்: அசாத் மௌலானா

Share

சர்வதேச விசாரணைக்கு தயார்: அசாத் மௌலானா

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையின் முன்பாக சாட்சியமளிக்க தாம் தயார் என அசாத் மௌலானா அறிவித்துள்ளார்.

ஜெனிவாவில் அறிக்கையொன்றை வெளியிட்ட மௌலானா, சுயாதீன விசாரணை ஒன்றின் முன்னால், தான் சாட்சியமளிக்க தயார் என குறிப்பிட்டுள்ளார்.

இது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிரித்தானியாவின் சனல் 4 மூலம் செப்டம்பர் 5 ஆம் திகதி ஒளிபரப்பப்பட்ட “இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள்” என்ற ஆவணப்படம் இலங்கையில் கணிசமான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்த ஆவணப்படம் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணைக்கு ஆதரவை உருவாக்கியுள்ளது.

எனினும் நிறைய வதந்திகள் மற்றும் போலி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கூட அவதூறு செய்து சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

தாம் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் பணியாற்றிய போதும், தாம் ஆயுத பயிற்சி பெற்ற போராளி அல்ல.

இதன் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல அரசியல் கொலைகள் தொடர்பான முக்கியமான மற்றும் இரகசியத் தகவல்கள் தனக்குக் கிடைத்தன” என்றும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...

Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...