9 31
இலங்கைசெய்திகள்

சிறுபோக செய்கையில் இலை மடிச்சுக்கட்டியின் தாக்கம் தொடர்பில் விழிப்பூட்டல்

Share
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கையில் இலை மடிச்சுக்கட்டியின் தாக்கம் சில பகுதிகளில் இனம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் சோதிலட்சுமி விஜயராசா தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் விவசாய திணைக்களத்தின் அறிவுறுத்தலை பின்பற்றி அதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

கிளிநொச்சி அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் 10800 ஹெக்டேயர் அளவில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இலை மடிச்சுக்கட்டி நோயின் தாக்கத்தை அவதானித்திருக்கிருக்கிறோம்.

நெல் இலைகள் பச்சையம் அற்ற நிலையில் இலைசுருண்ட நிலையில் காணப்படும். அதனுள் புழு காணப்படும். அந்த புழுவானது இலைகளை மடித்து அதனுள் சுமார் 300 வரையான முட்டைகள் இட்டு 3 – 5 நாட்களில் புழு வெளியேறும்.

அந்த புழுவானது இலைகளைச்சுருட்டி 16 நாட்கள் வரை உயிர்வாழும். மஞ்சள், பச்சை நிறம் கலந்த புழுவாக காணப்படும். விவசாயிகள் வயல்களில் நிழல்களைத் தவிர்ப்பதோடு நைதரசன் உரப்பாவணையையும் குறைக்க வேண்டும்.

சிபாரிசு செய்யப்பட்ட இரசாயனங்களை பயன்படுத்த வேண்டும். விவசாய போதனாசிரியர்களின் அறிவுரைகளை பின்பற்றி பொருத்தமான கிருமி நாசினியை விசுறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
image 1000x630 5
செய்திகள்உலகம்

பாடகர் ஜூபின் கார்க் மரணம்: எந்த சந்தேகமும் இல்லை என சிங்கப்பூர் காவல்துறை அறிவிப்பு

பிரபல அசாமிய பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில்...

1730254871 24 665e955359147
செய்திகள்இலங்கை

ஊவா மாகாணத் தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளி விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து மாகாணத் தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21...

image 1000x630 3 1
உலகம்செய்திகள்

பிலிப்பைன்ஸில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் இன்று (அக்டோபர் 17, 2025) 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச...

image 1000x630 2
செய்திகள்உலகம்

வெள்ளை மாளிகையில் ஜெலன்ஸ்கி – டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு இன்று

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17)...