2 4
இலங்கைசெய்திகள்

மாணவர் விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் அவுஸ்திரேலியா

Share

மாணவர் விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் அவுஸ்திரேலியா

சர்வதேச மாணவர்கள் அவுஸ்திரேலியாவில்(Australia) மாணவர் விசாவில் காலவரையின்றி தங்குவதைத் தடுக்க அந்நாட்டு அரசு கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் இனி அவுஸ்திரேலியாவில் தங்கி மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விதிமுறைகள் அடுத்த மாதம் (ஜூலை 1) முதலாம் திகதி நடைமுறைக்கு வருகிறது.

இந்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பவர்களுக்கு மட்டுமே விசா வழங்க அவுஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் தற்காலிக பட்டதாரி விசா(Temporary Graduate visa), வருகையாளர் விசா(Visitor visa) , மின்னணு பயண ஆணைய விசா(Electronic Travel Authority visa), மருத்துவ சிகிச்சை விசா( Medical Treatment visa), இலத்திரனியல் வருகையாளர் விசா (eVisitor visa), போக்குவரத்து விசா (Transit visa), தூதரக தற்காலிக விசா(Diplomatic Temporary visa), தற்காலிக வேலை விசா( Temporary Work visa ), வீட்டுப் பணியாளர் தற்காலிக விசா (Domestic Worker Temporary visa) போன்ற தற்காலிக விசாக்களை வைத்திருப்பவர்கள் மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியாது என கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் படிக்க விரும்பும் பார்வையாளர் விசா விண்ணப்பதாரர்கள் நாட்டிற்கு வெளியே இருந்து விண்ணப்பிக்க வேண்டும்.தற்காலிக விசாவில் சர்வதேச மாணவர்கள் அவுஸ்திரேலியாவில் காலவரையின்றி தங்குவதை தடுக்கும் வகையில் அந்நாடு இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 11ஆம் திகதி அறிவிக்கப்பட்ட புதிய இடம்பெயர்வு யுக்தியின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
world 26
செய்திகள்இந்தியா

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து...

world 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தங்கல்லையில் பரபரப்பு: போதையில் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள தங்கல்லை, குடவெல்ல பகுதியில் நேற்று (மே 04) மாலை நபர் ஒருவர்...

world 24
செய்திகள்இந்தியா

தமிழகத் தேர்தலில் தவெக சாதனை வெற்றி: மே 7-ல் முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்ட நடிகர் விஜய்யின்...

world 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை பெறவில்லை: அமைச்சர் நலிந்த ஜயதிஸ விளக்கம்

இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தனது பதவிக்காலத்தின் எந்தவொரு கட்டத்திலும் இரட்டைக்...