பிரதேச சபை செயலாளரை அச்சுறுத்தியவரைக் கைது செய்யக்கோரி கவனயீர்ப்பு

யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபை முன்றலில் பிரதேச சபை செயலாளரை அச்சுறுத்தியவரைக் கைது செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதில் அமைக்கப்படுவது தொடர்பில் அவ்விடத்திற்கு சென்றுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் பார்வையிட செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் அவ்விடத்திற்கு சென்றுள்ளனர்.

Protest 01

முறைப்பாட்டுடன் தொடர்புடையவர் செயலாளரை அச்சுறுத்தி அவருடைய கைத்தொலைபேசியை பறித்து உடைத்து அச்சுறுத்தி தொலைபேசியை எடுத்து சென்றுள்ளார்.

அது தொடர்பில் அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.

எனினும் குறித்த நபர் வெளிநாட்டுப் பிரஜை எனவும் தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாகவும், குறித்த நபரை உடனடியாக கைது செய்ய கோரி இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Exit mobile version