இலங்கைசெய்திகள்

நாட்டில் இன்று பெரும்பாலான பாடசாலைகளில் வரவின்மை! – இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டு

download 1 1 2
Share

அரசாங்கத்தின் தெளிவில்லாத அறிவித்தல் காரணமாக இன்று (27.06.2022) நாட்டில் உள்ள பெருமளவான பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர் வரவு நிலை குறைவாக காணப்பட்டதோடு. பெரும்பாலான பாடசாலைகள் இயங்கவில்லை.

01. மூன்று நாட்கள், ஐந்து நாட்கள் பாசாலைகளை இயக்குதல் என்ற அரசாங்கத்தின் குழப்பமான அறிவித்தல்.

02. வருகைதரமுடியாத ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட விடுமுறையாக கணிக்க முடியாது. என்ற ஆசிரியர்களுக்குச் சாதகமான அறிவித்தல்.

03. அதிபர், ஆசிரியர்களுக்கான போக்குவரத்து வசதியின்மை.

04. சீரற்ற எரிபொருள் விநியோகம்.

05. இ.பொ.ச ஊழியர்களின் பணிப்பகஸ்கரிப்பு.

06. எரிசக்தி அமைச்சரின் எரிபொருள் இல்லையென்ற அபாயகரமான அறிவித்தல்.

இத்தகைய நிலைகளைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து மார்க்கங்கள் சீராகும்வரை பாடசாலை செல்வதைத் தவிப்போம் என நாம் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

அதன்படி நாட்டில் உள்ள பெருமளவான பாடசாலைகளில் போக்குவரத்து மார்க்கங்கள் இல்லாத பலர் எமது வேண்டுகோளை ஏற்று பாடசாலைக்குச் செல்லவில்லை. ஒரு சில பாடசாலை அதிபர்கள் ஆசியர்களைக் கட்டாயப்படுத்தி அழைத்த அதேவேளை மாணவர்களின் வரவு குறைவாகவே இருந்ததாக எமது சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள், வலயச் செயலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இத்தகைய நிலை தொடராமல் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் சீராக, அரசாங்கம் ஆசிரியர்களுக்கான எரிபொருள் விநியோகம், போக்குவரத்து மார்க்கங்கள் என்பவற்றிற்கு உடனடியாக தீர்வு காணவேண்டும். இல்லையேல் ஒட்டுமொத்த பாடசாலைகளையும் நீண்ட நாட்களுக்கு மூடும்நிலை ஏற்படும்.

இவ்வாறு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...