தமிழர் பகுதியில் வழிபாட்டுக்கு சென்று திரும்பியர்கள் மீது தாக்குதல்
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் வழிபாட்டுக்கு சென்று திரும்பியர்கள் மீது தாக்குதல்

Share

தமிழர் பகுதியில் வழிபாட்டுக்கு சென்று திரும்பியர்கள் மீது தாக்குதல்

உழவு இயந்திரத்தில் பயணித்த குழுவினர் மீது மற்றுமொரு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் – யாழ்ப்பாணம் வீதியில் வெள்ளாங்குளம் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த குழுவினரே இந்த தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

உழவு இயந்திரம் பயணித்த போது வீதியில் தடைகளை ஏற்படுத்தி இந்த தாக்குதலை நடத்தியதுடன் தனிப்பட்ட தகராறு காரணமாகவே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வெள்ளாங்குளம் பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 189
செய்திகள்உலகம்

டிரம்பின் ஈரானியப் போரை நிறுத்தும் முயற்சி தோல்வி: செனட் சபையில் ஜனநாயகக் கட்சியின் தீர்மானம் நிராகரிப்பு!

அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்துவதற்கும், அமெரிக்கப் படைகளைத் திரும்பப்...

world 188
செய்திகள்உலகம்

துருக்கியில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: 8 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி – நாடு முழுவதும் அதிர்ச்சி!

தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (ஏப்ரல் 16) இடம்பெற்ற பயங்கரத் துப்பாக்கிச் சூட்டுச்...

world 187
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு திரும்புவோருக்கு விசேட வசதி: இனி இணையவழியில் பேருந்து ஆசன முன்பதிவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, காலி மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களிலிருந்து மீண்டும்...

world 191
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 16) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...