வாக்குமூலம் அளித்த இளைஞன் வீட்டின் மீது தாக்குதல்!

Sword Attack 3 Injured Thenmaradchi Kodikamam

தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்த சுதுமலை பகுதியை சேர்ந்த இளைஞனின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் புகுந்து அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் இளைஞன் ஒருவரை அழைத்து வாக்கு மூலத்தை பதிவு செய்திருந்தனர்.

பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்த இளைஞனின் வீட்டுக்கு நேற்றைய தினம் புதன்கிழமை அத்துமீறி நுழைந்த கும்பல் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version