ராகம மருத்துவ பீடத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் பாகுபாடின்றி சட்டத்தை அமுல்படுத்துமாறு ஓய்வுபெற்ற பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் பேரில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (2) இச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த இரண்டு விசேட புலனாய்வு குழுக்களை நியமித்தார்.
இந்த இரண்டு விசாரணைக் குழுக்களும் களனி எஸ்பியின் மேற்பார்வையில் இயங்கி வருகின்றன.
அரச நிறுவனமொன்றுக்கு சொந்தமான காரும் அதன் சாரதியும் மருத்துவ மாணவர்களால் கைது செய்யப்பட்டு ராகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களையும் கண்டுபிடிப்பதற்கு முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் உரிய தனிப்பட்ட சாட்சியங்களும் ஆராயப்படும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
#SrilankaNews
Leave a comment