police edited
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல்!

Share

நீதிமன்ற பிடிவிறாந்தை நிறைவேற்ற சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோகபுரம் பகுதியை சேர்ந்த இருவருக்கு நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு செல்ல தவறியமையால் நீதிமன்றினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த சென்ற கோப்பாய் பொலிஸ் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவரையும் கைது செய்ய முயன்றபோது , அங்கு நின்ற கும்பல் ஒன்று இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன், அவர்கள் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

அதனை அடுத்து அங்கிருந்து விலகி இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் பொலிஸ் நிலையம் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பரவும் டெங்கு: இதுவரை 13,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு, 4 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 13,416 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...

20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நீண்ட வார இறுதி விடுமுறை: நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் ஹோட்டல்கள் அனைத்தும் ஹவுஸ்புல்!

நீண்ட வார இறுதி விடுமுறையைக் கழிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் நுவரெலியாவிற்கு...

18 1
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கில் விமான நிலையங்கள் மூடல்: பிரித்தானிய குடிமக்களை வெளியேற்ற பாரிய திட்டம்!

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதால், மத்திய கிழக்கில் உள்ள பல முக்கிய விமான நிலையங்கள்...

17 1
உலகம்செய்திகள்

லெபனானில் போர் பதற்றம்: அமெரிக்க குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு தூதரகம் அவசர அழைப்பு!

லெபனானின் பாதுகாப்புச் சூழல் மிகவும் நிலையற்றதாகவும், கணிக்க முடியாததாகவும் மாறியுள்ளதால், அங்கு தங்கியுள்ள அமெரிக்க குடிமக்கள்...