சுகாதார ஊழியர் மீது தாக்குதல்!

Chunnakam

சுன்னாகம் பிரதேச சபையில் கடமையாற்றும் வருமான பரிசோதகர் சுகாதார பரிசோதகரை அச்சுறித்தி சுகாதார தொழிலாளி மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுன்னாகம் பிரதேச சபையின் சுகாதார ஊழியர் ஒருவர், இணுவில் பகுதியில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இணுவில் மத்திய கல்லூரி முன்றலில், சுன்னாகம் பிரதேச சபையின் அனுமதிபெறாது நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை, அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த நடை பாதை வியாபாரியினால் வருமானவரி பரிசோதகர், சுகாதார பரிசோதகர் ஆகியோர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போதே சுன்னாகம் பிரதேச சபையில் கடமையாற்றும் சுகாதார தொழிலாளி மீதும் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது

#SrilankaNews

Exit mobile version