அரசுக்கு ஆதரவு வழங்கிய புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புத்தளம் வான் வீதியில் உள்ள அவரின் வீடுமீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது , நாடாளுமன்ற உறுப்பினரின் உத்தியோகபூர்வ இல்லம், அவரது அலுவலகம் என்பன அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான அலிசப்ரி ரஹீம், கடந்த பொதுத் தேர்தலில் முஸ்லிம் தேசிய கட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார். அதன் பின்னர் அரசுக்கு ஆதரவு வழங்கினார்.
#SriLankaNews
Leave a comment