8 29
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Share

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான மானியத் திட்டம் அஸ்வெசும நலன்களைப் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என அறிவித்தல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவௌ (Secretary to the Ministry of Education) தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்க பெறாத ஆனால் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்திற்கு உள்ளான பிள்ளைகளுக்கு உரிய கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அதன் செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களைத் தெரிவு செய்யும் பணி எதிர்வரும் நாட்களில் துரிதமாக மேற்கொள்ளப்படும் என செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளைm பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு வழங்குவதற்கான மேலதிக மதிப்பீடு நேற்று (18) நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி, ஐந்து வயது முதல் பதினாறு வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒரு குழந்தைக்கு ஆறாயிரம் (6000) ரூபாய் கொடுப்பனவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...