24 665ba346c404b
இலங்கைசெய்திகள்

நாட்டில் 24 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு

Share

நாட்டில் 24 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு

இதுவரை அஸ்வெ சும நிவாரணம் கோரி விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.

எப்பாவளையில் அமைந்துள்ள லங்கா அரச பொஸ்பேட் நிறுவனத்தின் கண்காணிப்புச் சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, 2ம் கட்ட நிவாரணமாக ஜூலை முதல் 24 லட்சம் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்க எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இதுவரையில் அஸ்வெசும நிவராணப் பணத்திற்காக விண்ணப்பிக்காதவர்களுக்கு மேலதிக வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முதல் சுற்றில் 20 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
6 18
இலங்கைசெய்திகள்

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல்...

5 18
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்த செவ்வந்தியை தமிழர் பகுதிக்கு அழைத்து சென்ற சிஐடியினர்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, கிளிநொச்சிக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச்...

4 18
இலங்கைசெய்திகள்

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி...

3 18
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பில் முக்கிய பிரமுகர்கள்! வெளிவரும் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியுடன் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நெருங்கிய...