நாடாளுமன்றத்தில் இன்று ரம்புக்கனை சம்பவம் தொடர்பில், சர்ச்சை நிலை ஏற்பட்டதையடுத்து சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
ஆரம்பத்திலேயே ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க கருத்து வெளியிட்டார்.
இது விவகாரம் தொடர்பில் ஆராய கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுத்தார்.
அதன் பின்னர் மேற்படி சம்பவம் தொடர்பில் சபையில் எதிரணி உறுப்பினர்கள் கருத்துகளையும் முன்வைத்தனர்.
இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பில் சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது. இதனால் சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் இன்று சபையில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.
Leave a comment