24 66569ab506d54
இந்தியாஇலங்கைசெய்திகள்

ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்கள் கைது : இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பயங்கரவாத தடுப்பு பிரிவு

Share

ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்கள் கைது : இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பயங்கரவாத தடுப்பு பிரிவு

இந்தியாவின் (India) அஹமதாபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையை (Sri Lanka) சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் குறித்த மேலதிக விசாரணைக்காக குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பொலிஸார் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் இரண்டு பேரை இலங்கை பொலிஸார் தடுத்து வைத்துள்ள நிலையில், அவர்களையும் விசாரணை செய்யும் வகையில் குஜராத் பொலிஸாரின் இலங்கை விஜயம் அமையவுள்ளது.

இதேவேளை ஓஸ்மண்ட் ஜெரார்ட் என்பவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பதோடு அவரை கைது செய்வதற்காக 2 மில்லியன் ரூபாயை இலங்கை அரசாங்கம் வெகுமதியாக அறிவித்துள்ளது.

இந்தநிலையில் அஹமதாபாத்தில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களுக்கும் பாகிஸ்தானை சேர்ந்த அபுதா என்ற மதப்போதகர் சுமார் 42 நாட்களாக போதனைகளை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களுக்கும் இந்தியாவில் உதவியதாக கூறப்படும் மூன்று பேர் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களின் தொலைபேசி தகவல்களுக்கு அமைய, பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லையில் ட்ரோன் வழியாக ஒரு ஆயுதம் வழங்கப்பட்டமை தொடர்பான விடயம் தற்போது விசாரணையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, விசாரணையின் பல்வேறு கோணங்களைத் தொடர மூன்று பொலிஸ் அணிகள் டெல்லி, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
1529934317 gun gunshot 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பத்தரமுல்லையில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு! – ஜீப் வாகனத்தில் இருந்த தம்பதியினர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை!

கொழும்பு – பத்தரமுல்லை, அக்குரேகொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர்...

25 679d968d808df
இலங்கைசெய்திகள்

18 ஆண்டுகால நீதிப் போராட்டம்: வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!

குடா வஸ்கடுவ பகுதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் படுகொலை தொடர்பான வழக்கில்,...

26 69858a214d488
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரசாயனப் பொருளை சுவாசித்த 19 பேர் பாதிப்பு! – மொரட்டுவை பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மொரட்டுவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையின் போது, வெளியேறிய இரசாயனப்...

1770972444 seine 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் 9-வது நாளாக மீனவர் போராட்டம்! – தீர்வு காண ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கொளுத்தும் வெயிலையும் பாரிய மழையையும் பொருட்படுத்தாது மீனவர்கள் முன்னெடுத்து...