ஒமிக்ரோன் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக மூன்றாவது கட்ட பைசர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் பிரிவினரால், யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் மூன்றாம் கட்ட பைசர் தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கும் செயற்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியின் பணிப்புரையின் கீழ், நாட்டில் ஒமிக்ரோன் தொற்று அதிகரித்து வரும் நிலையில், யாழ். மாவட்டத்தில் ஓமிக்ரோன் தொற்றினைக் கட்டுப்படுத்தும் முகமாக இராணுவத்தினரால் 03ம் கட்ட பைசர் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் இன்றைய தினம் யாழ் கோட்டைப் பகுதியில் முன்னெடுக்கப்படுகின்றது.
ஏற்கனவே ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையிலும் பொதுமக்கள் மூன்றாம் கட்ட பைசர் தடுப்பூசியைப் பெறுவதில் தயக்கம் காட்டி வரும் நிலையில், இராணுவத்தினரால் குறித்த தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews
Leave a comment