images 4 2
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

குடும்பத் தகராறு முற்றியதில் பயங்கரம்: வீட்டுக்குத் தீ வைத்த தந்தை – மகளுடன் அவரும் பலி!

Share

கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரகம் கொலனி பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக நபரொருவர் தனது வீட்டிற்குப் பெற்றோல் ஊற்றித் தீ வைத்ததில், அவரும் அவரது 13 வயது மகளும் உயிரிழந்த சோக சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இன்று (06) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற இந்தத் தீ வைப்புச் சம்பவத்தில் தீயை வைத்த 43 வயதுடைய தந்தை மற்றும் அவரது 13 வயதுடைய மகள் ஆகியோர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தீக்காயங்களுக்கு உள்ளான 36 வயதுடைய மனைவி, 15 வயதுடைய மகள், 66 வயதுடைய பாட்டி மற்றும் அவர்களைக் காப்பாற்றச் சென்ற 20 வயதுடைய மகன் ஆகியோர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ வைத்த நபர் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியைத் தாக்கி வந்துள்ளார். இது தொடர்பாகக் கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தந்தை தீ வைக்கும் போது வீட்டில் இல்லாத 20 வயதுடைய மகன், சம்பவம் அறிந்து விரைந்து வந்து தனது தாய் மற்றும் சகோதரிகளைக் காப்பாற்ற முயன்ற போதே தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

தொடர்ச்சியான குடும்பத் தகராறு மற்றும் மதுப் பழக்கமே இந்தத் துயரச் சம்பவத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

 

 

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...