im 59055288
உலகம்செய்திகள்

நானே இப்போதும் ஜனாதிபதி: நியூயோர்க் நீதிமன்றத்தில் மதுரோ அதிரடி வாதம்!

Share

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்க நீதிமன்றமொன்றில் முதன்முறையாக முன்னிலையாகி, தனக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

நியூயோர்க் நகர நீதிமன்றத்தில் இடம்பெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விசாரணையின் போது, மதுரோ “நான் இப்போதும் வெனிசுலாவின் சட்டபூர்வமான ஜனாதிபதி” என நீதிமன்றில் அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

அமெரிக்க அரசாங்கத்தினால் தனக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் (Narco-terrorism) மற்றும் இதர பாரதூரமான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில ஆண்டுகளாக வெனிசுலா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே நிலவி வரும் அரசியல் மோதல்களின் உச்சக்கட்டமாக, மதுரோவை கைது செய்ய உதவுபவர்களுக்கு அமெரிக்கா ஏற்கனவே பல மில்லியன் டொலர் வெகுமதிகளை அறிவித்திருந்தது. இந்த நிலையில், அவர் அமெரிக்க நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகித் தனது தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...