IMG 20220308 WA0028
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

பெண்கள் தலை நிமிரும் காலம் வந்துவிட்டது – டக்ளஸ்!!

Share

 

போராட்ட வரலாற்றிலும் சரி ஜனநாயக அரசியலிலும் சரி நான் பெண்களுக்கான உரிமையை ஆண்களுக்கு சரிநிகராகவே கொடுத்து வந்திருக்கின்றேன்.

பெண்களின் தனித்தவத்தை அடையாளப்படுத்தும் வகையில் தமிழர் தேசத்தை மட்டுமன்றி பெண்கள் சமூகமும் தலைநிமிரும் காலத்தை உருவாக்குவோம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை மெதடிஸ்த மகளிர் உயர்தரப் பாடசாலையை தேசிய பாடசாலையாக மாற்றும் நிகழ்வில் பிரதம அதிதயாக கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெயர் பலகையை திறந்து வைத்து உரையாற்றுகயைிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

இன்று உலக மகளிர் தினமாகும். இந்த பெருமை மிக்க நாளில் பெண்களின் தனித்தவத்தை அடையாளப்படுத்தும் வகையில் இந்தப் பாடசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கான தன்னை துறைசார் அமைச்சர் அழைத்து இந்த தேசிய திட்டத்தை எங்கிருந்து ஆரம்பிப்போம் என கேட்டிருந்தார். அதற்கு நான் எமது யாழ் மாவட்டத்தின் இந்த பாடசாலையை முன்மொழிந்திருந்தேன்.

அதனடிப்படையில் இன்று அந்த பாடசாலை மாணவர்களினதும் கல்விச் சமூகத்தினதும் கனவு நனவாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எமது உரிமைப் போராட்ட காலகட்டங்களிலும் சரி அதன் பின்னரான ஜனநாயக அரசியலிலும் சரி நான் பெண்களுக்கான உரிமையை ஆண்களுக்கு சரிநிகராகவும் சில சமயங்களில் அதற்கு சற்று அதிகமாகவும் கொடுத்து வந்திருக்கின்றேன்.

அதேபோன்று ஆயுதப் போராட்ட களமுனையில் முதல் வீரகாவியமான பெண்ணாகவும் எனது சகோதரியான மதிவதனி என்றும் இயற்பெயர் கொண்ட சோபா வரலாற்றில் பதிவாகியுள்ளார்.

அதுமட்டுமல்லாது எனக்கும் கட்சிக்கும் மின நெருக்கமான மனித உரிமை சட்டத்தரணியுயான மகேஸ்வரி வேலாயுதம் உள்ளிட்ட ஏராளமானவர்களையும் வன்முறையாளர்களினால் இழந்திருக்கின்றேன்.

ஆனபடியால் எனக்கு இந்த போராட்டத்தின் வலிகள் நன்கு தெரியும். அதனால்தான் இந்த போராட்டத்தின் அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் நானும் ஏதோ ஒரு வகையில் பொறுப்புக்கூற வேண்டும் என்றதனடிப்படையில் அதற்கான தார்மீக பொறுப்பேற்று எமது மக்களின் மீள் எழுச்சிக்கு என்னாலான சேவைகளை தொடர்ந்து செய்துவருகின்றேன்.

அதேபோன்று எமது மக்களும் எனது அரசியல் பலத்தை பலப்படுத்துவதும் அவசியமாகும் அதனூடாகவே இன்றும் பலவகையான பலனை மக்கள் அடையமுடியும் என்றும் நம்புகின்றேன்.

இதேவேளை 72 களில் தரப்படுத்தலுக்கு எதிராக நாம் போராடியிருந்தோம். அதன்பின்னர் பல வருடங்கள் கழித்து நான் அமைச்சராக இருந்தபோது ஸ்ரான்லி வீதியில் 400 முதல் 500 பேர் என்னை வந்து சந்தித்து தரப்படுத்லினூடாக தமக்கான பல்கலை நுழைவை ஏற்படுத்தி தருமாறு கோரியிருந்தனர்.

நான் அதை ஏற்று அன்றைய ஜனாதிபதியுடன் பேசி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தேன்.

ஆனாலும் அன்று தரப்படுத்தலை எதிர்த்த நாம் அதன்பின்னர் அதை வேண்டும் என கோரியமையானது எமது தமிழ் மக்களின் அன்றைய அரசியல் தலைவர்கள் விட்ட தவறாகவும் அவர்கள் எமது மக்களுக்கு ஏற்படுத்திய தோல்வியாகவுமே அதை நான் பார்க்கின்றேன்.

இதேவேளை தற்போது எமது மக்கள் மத்தியில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. இதை நாம் தான் இங்குள்ள அரசுடன் பேசி தீர்வுகாணவேண்டும்.

அதைவிடுத்து பாரத பிரதமருக்கு கடிதமெழுதுகின்றனர். 13 ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் அதுதான் எமது பிரச்சினைக்கான தீர்வுக்கு ஆரம்ப புள்ளி என நான் கடந்து 30 வருடங்களுக்கு முன்பிருந்து வலியுறுத்தி வந்திருக்கின்றேன்.

எனது இந்த தீர்க்கதரிசனமிக்க கூற்றை 30 வருடங்களுக்கு முன்னர் இன்று ஏற்றுக்கொண்டது போல ஏற்றிருந்தால் இத்தனை அழிவுகளையும் துயரங்களையும் எமது மக்கள் கண்டிருக்க வேண்டி ஏற்பட்டிருக்காது.

யாதும் ஊரே யாவருரும் கேளிர் என்பதே எனது நிலைப்பாடு. அந்தவகையில் இனியாவது எமது மக்கள் சரியானது எது சரியாவனவர்கள் யார் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

அந்தவகையில் இது பெண்களுக்கான தனித்துவத்தை அடையாளப்படுத்தும் கல்லூரி என்பது மட்டுமல்லாது பெண்கள் சமூகமும் தலை நிமிரும் காலத்தையும் நாம் உருவாக்குவோம் .

தேசிய பாடசாலையாக தரமுயர்ந்துள்ள மெதடிஸ்த மகளிர் உயர்தரப் பாடசாலையின் கல்விச் சமூகத்துக்கு எனது பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...