பயங்கரவாத தடைச் சட்டத்தை தடை செய்யக் கோரி, இன்றையதினம் யாழில் கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பேருந்து நிலைய வளாகத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனார்.
மேலும் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை கையெழுத்துத் திரட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNEws
Leave a comment