கம்பஹா நகரில் உள்ள பிரபல மேலதிக வகுப்பு நிலையத்தின் பெண்களுக்கான கழிவறையில் நவீன தொழில்நுட்ப கமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் தெற்கில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் மேலதிக வகுப்பு நிலையத்தின் உரிமையாளர், ஆசிரியர்கள் உள்ளிட்ட 15 பேரிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரையில் குறித்த மேலதிக வகுப்பு நிலையத்தைத் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#srilankaNEws