272907593 2060339424148227 696361987289829513 n
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

யாழ் பல்கலைக்கழகத்தை சூழ கறுப்புத்துணிகள்!!

Share

யாழ் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் கறுப்பு வர்ண துணி கட்டபட்டு இன்றைய சுதந்திர தினத்தை கரி நாளாக மாணவர்கள் அனுஸ்டிக்கிறார்கள்.

இன்று முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் சிவில் சமூகங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்திற்கு செல்வதற்காக பல்கலைக்கழகத்தில் தமது வாகனங்களை தரித்துவிட்டு செல்ல முற்பட்டனர்.

இந்நிலையில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டதோடு பரமேஸ்வரா ஆலயத்திற்கு செல்பவர்களிற்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய நாள் சுதந்திர தினம் என கொடியேற்றுகிறீர்கள் ஆனால் பல்கலைகழகத்திற்குள் மாணவர்கள், ஆலய வழிபாட்டை மேற்கொள்பவர்கள் செல்ல முடியாதா? என மாணவர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.

பல்கலைக்கழகத்தில் கடமையாற்றுபவர்களையே நாங்கள் அனுமதிக்கவில்லை என பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மாணவர்களால் சுதந்திர தினம் கரி நாள் என தெரிவித்து மாணவர்களால் கறுப்பு வர்ண துணி பிரதான வாயிலில் கட்டப்பட்டது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 3 5
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் கோர மண்சரிவு: 7 பேர் பலி! 82 பேரைக் காணவில்லை – மீட்புப் பணிகள் தீவிரம்!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

25284407 tn46
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைக்கும் பெர்ன் பனிப்புயல்: 10,000 விமானங்கள் இரத்து – 18 மாநிலங்களில் அவசரநிலை!

அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கி வரும் ‘பெர்ன்’ (Winter Storm Fern) எனப்படும் மிக சக்திவாய்ந்த...

articles2FWeZuOSJYmiw4RXxNRts3
செய்திகள்இலங்கை

2026 அரச வெசாக் நிகழ்வு மே 30-இல்: மகாநாயக்க தேரர்களின் இணக்கத்துடன் தீர்மானம்!

2026-ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அரச வெசாக் (State Vesak Festival) நிகழ்வை மே மாதம் 30-ஆம்...

MediaFile 2 5
செய்திகள்இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி! கட்டுநாயக்கவில் வைத்து சிஐடியினரால் கைது!

சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவிற்குத் தப்பிச் சென்று...