OApLPfd9hGYgOEiAVOMj 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிழக்கில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்!

Share

கிழக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக 55 பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு வழங்கும் நோக்கில் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வு நேற்றைய தினம் (23-05-2023) திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட ஆளுநர் செந்தில் தொண்டமான்,

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் போக்குவரத்து கட்டணங்கள் மிகவும் உயர்வாக உள்ளன.

இதனால் நியமனம் வழங்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அவர்களின் நலன்கருதி இருப்பிடங்களுக்கு அருகாமையில் உள்ள பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருக்குமானால் அங்கு கடமைக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,

நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் எதிர்வரும் ஓராண்டில் 10 பட்டதாரி ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க, ஆளுநரின் செயலாளர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், அரச உத்தியோகஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 10
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் புதிய வரைபடம்: கடல் எல்லைக் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துகிறதா ஐ.ஆர்.ஜி.சி?

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), தனது கடற்படையின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ்...

world 9
செய்திகள்உலகம்

வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் எதிர்வரும் 7ஆம் திகதி இலங்கைக்கு அரசமுறைப் பயணம்!

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To...

world 8
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்!

ஹோர்முஸ் ஜலசந்திக்குள் (Strait of Hormuz) நுழைய முயன்ற எதிரிப் போர்க்கப்பல்களை “விரைவான மற்றும் தீர்க்கமான...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாட்ஸ்அப் காணொளி அழைப்பு மோசடி: இலங்கையர்களுக்கு கணினி அவசரகால ஆயத்தக் குழு எச்சரிக்கை!

இலங்கையர்களை இலக்கு வைத்து வாட்ஸ்அப் (WhatsApp) தளத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் புதிய வகை காணொளி அழைப்பு...