சலுகை விலையில் அப்பியாசக் கொப்பிகள்

books

பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளை 30 வீத சலுகையில் வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, பாடசாலை மாணவர்கள் அரசாங்க அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட அப்பியாசக் கொப்பிகளை சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக கொள்வனவு செய்ய முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அப்பியாசக் கொப்பிகள் அடுத்த வாரம் முதல் நாடெங்குமுள்ள சதொச விற்பனை நிலையங்களில் வாங்க முடியும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Exit mobile version