24 662610f5e52c0
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்!! சர்வதேசத்தை நாடவுள்ள கத்தோலிக்க திருச்சபை

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்!! சர்வதேசத்தை நாடவுள்ள கத்தோலிக்க திருச்சபை\

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் (Easter Attack) தொடர்பாக சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க பல வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஊடாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) பிரேரணையை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

தாக்குதல்களின் ஐந்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் (Cardinal Malcolm Ranjith) நேற்று (21.04.2024) தென்னிலங்கை ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “கடந்த மற்றும் தற்போதைய அரசாங்கங்கள் ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும், தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சதி அல்லது அதற்கு மூளையாக செயல்பட்டவர்களை வெளிப்படுத்தத் தவறிவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தருவதாக வாய்மொழியாக வழங்கிய வாக்குறுதியை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksha) நிறைவேற்றத் தவறிய சூழலில், தற்போது அவர் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) ஆகியவற்றின் எழுத்துப்பூர்வ உறுதிமொழிகள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்.

எனினும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவே (Ranil Wickremesinghe) தற்போது நாட்டின் ஜனாதிபதியாகவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக வெறும் தூதுவராகவே செயற்பட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விவரிக்கப்பட்ட கொழும்பு வடக்கின் அன்றைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் தனது கடமைகளை நிறைவேற்றாமல் இருந்த தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon)இன்று பொலிஸ் மா அதிபராக (IGP) உள்ளார்.

மேலும், இந்திய புலனாய்வுப் பிரிவினர் முன்னெச்சரிக்கை விடுத்திருந்தும், படுகொலைகளைத் தடுக்கத் தவறிய அப்போதைய அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) பணிப்பாளர் நிலாந்த ஜெயவர்தன இன்று பொலிஸ் துறையின் இரண்டாம் நிலைப் பணிப்பாளராக உள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் நீதியை எதிர்பார்க்க முடியுமா என கருதினால் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...