22 6
அரசியல்இலங்கைசெய்திகள்

அநுரகுமாரவின் வெளிப்பாடு அச்சுறுத்தல் அல்ல : பாதுகாக்கும் சுமந்திரன்

Share

அநுரகுமாரவின் வெளிப்பாடு அச்சுறுத்தல் அல்ல : பாதுகாக்கும் சுமந்திரன்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வடக்கில் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அவரைப் பாதுகாக்க முன்வந்துள்ளார்.

“தெற்கில் உள்ள மக்கள் மாற்றத்திற்காக அணிதிரளும் போது, அந்த மாற்றத்தை நீங்கள் எதிர்த்தால், தென்னிலங்கை மக்களின் மனநிலையை கற்பனை செய்து பாருங்கள். அந்த மாற்றத்தின் எதிர்ப்பாளர்களாக யாழ்ப்பாணம் பார்க்கப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று அநுரகுமார வடக்கில் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினாலும் ஏனையோரினாலும், இந்;த கருத்து, வடமாகாண மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வெளியிடப்பட்ட கருத்து என்று விமர்சிக்கப்பட்டது.

எனினும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சுமந்திரன், அநுரகுமார திஸாநாயக்கவின் கருத்துக்கள் இனவாதத் தூண்டுதலானது என்ற கருத்தை மறுத்தார். “தோழர் அநுரகுமார இந்த வார்த்தைகளை இனவாத உணர்வை வெளிப்படுத்தும் நோக்கில் கூறியதாக நான் நினைக்கவில்லை. எனக்கும் அவரை நன்றாக தெரியும். அவர் அப்படிப்பட்ட ஒருவர் அல்ல” என சுமந்திரன் கூறினார்.

“உண்மையில், இந்த நாட்டில் இனவாதத்தை ஒழிப்பதில் அவர் மிகுந்த அக்கறை எடுத்துள்ளார். எனவே, இந்த விடயத்தில் எங்களுக்கு வேறுபட்ட உணர்வுகள் இல்லை என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திஸாநாயக்கவின் கருத்துக்களை விமர்சித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,வடக்கு தமிழ் மக்களிடமும் தெற்கிலும் உள்ள மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திஸாநாயக்கவிடம் அழைப்பு விடுத்திருந்தார்.

Share
தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...