4 37
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அநுரவுக்கு உதவ முன்வந்துள்ள அரசியல்வாதி

Share

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அநுரவுக்கு உதவ முன்வந்துள்ள அரசியல்வாதி

உகண்டாவில் பணம் பதுக்கப்படாவிடினும், நாட்டை விட்டு வெளியேற்றிய பணம் பற்றி எமக்கு தெரியும் என்று சர்வஜன சக்தி கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இப்போது எமது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஒரு திட்டமில்லாமல் ஜனாதிபதியாக இருப்பதால் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளார்.

அநுரகுமாரவுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம், நாங்கள் எதிர்க்கட்சிக்கு வருகிறோம், நீங்கள் உங்கள் அரசாங்கத்தை அமையுங்கள், நாங்கள் உங்களுக்கு தேவையான நேரத்தில் உதவுவோம்.

இப்போது அரசு ஊழியர்களின் சம்பளம் 6 மாதங்களுக்கு ஒருமுறை உயர்த்தப்படும் என்று கூறியுள்ளார். அதற்கு நாங்கள் உதவுகின்றோம்.

உகண்டாவில் பணம் பதுக்கப்படாவிடினும், நாட்டை விட்டு வெளியேற்றிய பணம் பற்றி எமக்கு தெரியும். அவற்றை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான வேலைத்திட்டம் என்ன? அதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் என்ன, ஆணைக்குழுக்கள் எவ்வாறு நிறுவப்படுகின்றன? இது எங்கள் திட்டத்தில் உள்ளது. இழந்த செல்வத்தை மீட்டெடுக்கும் பணியை அநுரகுமாரவால் செய்ய முடியும்.

சஜித் பிரேமதாசவை மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராக்க எந்த காரணமும் இல்லை. அவர் எதிர்க்கட்சித் தலைவரானால், எதுவும் செய்வதற்கில்லை. எனவே, எதிர்க்கட்சித் தலைவர் தேவையற்றவர் என்று மக்கள் முடிவு செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...