5 23
இலங்கைசெய்திகள்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அநுர வெளியிட்டுள்ள நம்பிக்கை

Share

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அநுர வெளியிட்டுள்ள நம்பிக்கை

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தற்போது நிலவும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில், நிதி ஸ்திரத்தன்மையை அடைவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இலங்கையின் மறுசீரமைப்பு செயல்முறை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது, இன்னும் ஒரு சிறிய தொகை மட்டுமே இறுதி செய்ய எஞ்சியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கால கடமைகளை நிர்வகிப்பதற்கான கணக்கீடுகள் ஏற்கனவே நடந்து கொண்டிருப்பதால், இதன்படி, 2028 ஆம் ஆண்டளவில், மறுசீரமைக்கப்பட்ட கடனை திருப்பிச் செலுத்த ஆரம்பிக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில், எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், பொருளாதார மீட்சி வேலைத்திட்டத்தின் மூன்றாவது மீளாய்வை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த மதிப்பாய்வு 2025 ஜனவரி இறுதி அல்லது பெப்ரவரி ஆரம்பத்தில் முடிவடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...